இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில், தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு தொடர்புள்ளதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கும், தமிழகத்தின் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவ்வமைப்பின் துணை பொதுச்சயலாளரான அப்துல் ரஹீம் விளக்கமளித்துள்ளார்.