நாங்களும் விளையாடுவோம்ல! மனிதர்களுடன் குழந்தையை போல விளையாடும் திமிங்கலம்! வைரலாகும் வீடியோ!
ஆராய்ச்சியாளர்கள் சிலர் பனிக்கடல் பகுதியில், படகில் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் பெலுகா திமிங்கலம் ஒன்று தென்பட்டுள்ளது. இவர்கள் அவர்களது கையில் இருந்த பிளாஸ்டிக் பந்து ஒன்றை கடலில் தூக்கி எரித்துள்ளனர்.
இதனை பார்த்த திமிங்கலம் அதனை விரைவாக எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்துள்ளது. இப்படி அவர்கள் எத்தனை முறை தூக்கி எரிந்தாலும், அத்தனை முறையும் அவர்களிடம் மீண்டும் எடுத்து வந்து கொடுத்துள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள், நீங்கள் போடும் பந்தை எடுத்து வந்து தந்து உங்களிடம் விளையாடவில்லை. நீங்கள் கடலில் போடும் குப்பைகளை உங்களிடம் எடுத்து வந்து தருகிறது.’ என கமெண்ட் செய்துள்ளனர்.
SA coaches getting hired all over the place. pic.twitter.com/Y6KP18DVFz
— Zelím Nel (@Zels77) November 7, 2019