கிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக விக்கிமீடியா அறக்கட்டளை அறிவிப்பு.
உலகின் மிக பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றான விக்கிப்பீடியா. சுமார் 250க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை பயனர்களுக்கு கொடுத்து வருகிறது. இணைய சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியா தளத்தை நிச்சயம் பயன்படுத்துவார்கள். விக்கிப்பீடியாவில் தனி மனிதன், நிறுவனங்கள், அரசு என அனைத்து விவரங்களும் இலவசமாக கிடைக்கும். வணிக விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் இதில் கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் லாப நோக்கமற்ற விக்கிப்பீடியா அறக்கட்டளைக்கு சொந்தமானது.
லாபம் நோக்கமற்ற இந்த விக்கிப்பீடியாவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டுகளாக நன்கொடை வசூலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உட்பட சில நாடுகளில் விக்கிப்பீடியா நன்கொடை வசூலித்து வருகிறது. இந்த நிலையில், விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளை, கிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக கூறியுள்ளது. விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளை (WMF), இனி கிரிப்டோகரன்சியில் நன்கொடைகளை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
மேலும், WMF அதன் BitPay கணக்கையும் மூடுவதாகக் தெரிவித்துள்ளது. இது கிரிப்டோகரன்சியை நேரடியாக நன்கொடை அளிக்கும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திறனை நீக்கிவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை முதலில் பிட்காயின், பிட்காயின் கேஷ் மற்றும் ஈதர் ஆகியவற்றில் நன்கொடைகளை ஏற்கத் தொடங்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…