ஊழலை போக்க எங்களால் முடியும் – ம.நீ.ம தலைவர் கமலஹாசன்
இந்த ஊழலை ஒழிக்க எங்களால் முடியும். நாங்கள் ஊழலை ஒழிக்க முன்னெடுக்கும் முயற்சிகள் பொதுமக்களை கண்டிப்பாக சென்றடையும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள், திருச்சியில் செய்தியாளர் சத்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம், நீங்கள் ஊழல், லஞ்சம் பற்றி கூறினீர்கள். இந்த ஊழல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் இதை பழகிவிட்டார்கள். எனவே, தற்போது நீங்கள் முன் வைக்கும் ஊழல் ஒழிப்பு கருத்துக்கள் மக்களை சென்றடையுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த கமலஹாசன், ‘ மக்கள் பழகிவிட்டார்கள் என்பதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? இந்த ஊழலை ஒழிக்க எங்களால் முடியும். நாங்கள் ஊழலை ஒழிக்க முன்னெடுக்கும் முயற்சிகள் பொதுமக்களை கண்டிப்பாக சென்றடையும். மக்கள் சென்று வரிசையில் நின்று தான் எதையும் பெற வேண்டி உள்ளது. ஆனால், தமிழக அரசு சென்றடையும் என கூறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் நின்று மக்கள் எந்த பொருளையும் வாங்கும் முறை தடுக்கப்படும் நிலையில், ஊழலும் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.