ஜோதிகா கூறிய கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்த நிலையில் அதற்க்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இணையத்தில் விவாத பொருளாகவும் மாறியது. இந்த சர்ச்சை குறித்து, ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கோவில்களை போலவே பள்ளிக்கூடத்தையும், மருத்துவமனைகளையும் ஒன்றாக கருத வேண்டும். என்கிற ஜோதிகாவின் கருத்தை சிலர் தவறாக பதிவிட பார்க்கிறார்கள். விவேகானந்தர், திருமூலர் போன்ற அறிஞர்கள் கூறிய கருத்துக்களை காதுகொடுத்து கேட்காதர்வர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் வாழும் உறைவிடமாக கருத வேண்டும். என்கிற கருத்தை அனைத்து மதத்தினரும் ஏற்கத்தான் செய்கிறார்கள் என அந்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
மேலும், ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவர்க்கும் நன்றி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…