இந்தியாவுக்காக ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம்.. பாகிஸ்தான் பவுண்டேஷன் கடிதம்..!

Default Image

கொரோனா வைரஸுடன் மோசமாக போராடும் இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தானின் “எடி அறக்கட்டளை” முன்வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக  தினமும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன், தடுப்பூசி  உள்ளிட்டவை  தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த எடி அறக்கட்டளை இந்தியாவிற்கு 50 ஆம்புலன்ஸ்களை வழங்க விரும்புவதாக தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு 50 ஆம்புலன்ஸ்  வழங்க பாகிஸ்தானின் எடி அறக்கட்டளை முன்வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொடர்பான நிலைமையை இந்த அமைப்பு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அறக்கட்டளைத் தலைவர் பைசல் எடி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடிதத்தில் இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்று கூறினார். இந்த தொற்றுநோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எடி டிரஸ்ட் இந்த கடினமான நேரத்தில்  50 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை இந்திய மக்களுக்கு உதவ முன்வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். எடி டிரஸ்ட் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறது.

பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் இந்தியாவுக்காக பிரார்த்தனை:

கொரோனவை எதிர்த்து போராடும் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகின்றேம். இந்தியாவின் கொரோனா நிலைமையை பார்த்த பாகிஸ்தான் மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பாகிஸ்தான் நடிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பதாக கூறி #PakistanstandswithIndia என்ற ஹேஸ்டேக் தொடர்ந்து ட்விட்டரில் ட்வீட் செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பதட்டமாக இருந்தாலும், மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் கஷ்டத்தில் நிற்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்