தலிபான்களுடன் நட்புறவை வளர்க்கத் தயாராக இருக்கிறோம் – சீனா அறிவிப்பு

Default Image

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புறவை வளர்க்கத் தயாராக இருக்கிறோம் என்று சீனா அறிவிப்பு.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் தலைமையிலான அரசுடன் நடப்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஏற்கனவே அங்கீகரித்த நிலையில், சீனாவும் தற்போது ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர் நடவடிக்கையை பொறுத்து அவர்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்திருந்தது. மேலும், தலிபான் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில், ஆட்சி பொறுப்பு முழுமையாக தலிபான் அமைப்பினரிடம் வந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகத்தை முழுமையாக காலி செய்து விட்டதாக அமெரிக்கர் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு படை உதவியுடன் தங்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து என அறிவித்தனர். விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழல் விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

மேலும், விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது. பிற்பகல் 12.30க்கு டெல்லியில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க முடியாத சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே 129 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அடுத்த விமானம் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்