கொரோனா வைரஸின் 3-வது அலையின் தொடக்கத்தில் உள்ளோம் – WHO
உலகம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் கொரோனா வைரஸானது கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓய்ந்துள்ள நிலையில், பல நாடுகளில் மிகவும் ஆபத்தான டெல்டா வகை வைரஸ் பரவி வருவதாகவும், தற்போது உலகம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.