தண்ணீர் குடிச்சா உங்க எடை குறையும்.! எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்..?
ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும், இழந்த திரவங்களை நிரப்பவும் சில சிறந்த நேரங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிக அவசியம், உடலின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நமது ஆரோக்கியத்தை காப்பாத்துவதற்கும் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட வழக்கமாக இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக தண்ணீர் சிறுநீரகக் கற்களை வர விடாமல் தடுக்குகிறது. முறையாக தண்ணீர் குடிக்காத தாலும் சிறுநீரகக்கற்கள் ஏற்படும். இதனால், தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது.
காலையில் எழுந்தவுடன்:
நீங்கள் காலையில் எழுந்தவுடன், ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது முக்கியம். இதனால், உங்கள் உடலின் உள் உறுப்புகளையும் உங்கள் இரத்த ஓட்டத்தயும் செயல்படுத்து மட்டுமல்லாமல், தூங்கும்போது நீங்கள் இழந்த நீரின் அளவை நிரப்புகிறது.
சோர்வு & களைப்பு:
நீங்கள் சில கடின உழைப்பு அல்லது அதிக உடற்பயிற்சிகளால் நீங்கள் சோர்வடைந்து இருப்பீர்கள். அப்போது, இழந்த திரவங்களை நீங்களே நிரப்ப நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் என்ன பயம் என்றால்….சோர்வை எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவுவதோடு, இது உங்கள் உடலின் இழந்த பலனை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.
நோய்வாய்ப்பட்டிருக்கும்போது:
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதா…? ஆமா என்றால்.. குடிநீர் என்பது 100 சதவீதம் தீர்வுகளில் ஒன்றாகும். அந்த நேரத்தில் தண்ணீர் அருந்தும்போது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்த்து மீட்பு செயல்முறையையும் கட்டுப்படுத்துகிறது.
தூங்க செல்வதற்கு முன்பு:
நீங்கள் தூங்க படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால், இரவு முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கலாம். மேலும், இது உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் சுத்தப்படுத்துகிறது.
உணவு அருந்துவதற்கு முன்பு:
உணவு உண்ணவதற்கு முன் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும், இதன் மூலம் எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனென்றால், செரிமானத்தை மேம்படுத்துதிலிருந்து உங்களை திருப்திப்படுத்துவதோடு கூடுதல் கலோரிகளை சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதனால் எடை குறைய சிறிது வாய்ப்பு இருக்கிறது.
உடற்பயிற்சிக்கு பிறகு:
ஒர்க் அவுட்க்கு பிறகு, ஒருவர் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பார். வொர்க்அவுட்டிற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் புத்துணர்ச்சியை உண்டாக்கும். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. அதனால் உடல் திரவச் சமநிலையை அடைய நிறைய தண்ணீரை உடற்பயிற்சிக்கு முன் குடிக்க வேண்டும்.