தண்ணீர் என்பது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், அதனை எப்போது பருக வேண்டும் ?எப்போது பருக கூடாது என்று பல நெறிமுறைகள் உள்ளன. அதனை கடைப்பிடித்தால் மட்டுமே தண்ணீர் நமது உடலுக்கு உகந்தது. தவறான நேரத்தில் தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் இல்லாமல் சாப்பிட முடியாது. காரணம் இடையிடையே தண்ணீர் அவ்வபோது குடித்து கொள்வார்கள். ஆனால், அவ்வாறு தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் இரப்பையில் தண்ணீர் சென்று உணவை செரிமானம் செய்வதற்காக உண்டாகும் அமிலங்கள் தங்கள் தன்மையை இழந்து விடுகின்றன. அதாவது அந்த அமிலங்கள் நமது உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும் திறன் கொண்டது. தண்ணீர் குடிப்பதால் அந்த சக்தியை அமிலங்கள் இழந்து விடுகின்றன. இதனால் நமது இரப்பை உணவு ஜீரணமாவதற்கு மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கிறது
உணவை நாம் உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் நமது உமிழ் நீர் சுரக்கும் அளவும் குறைகிறது. உணவு செரிமானத்திற்கு உணவுடன் உமிழ்நீர் மிகவும் முக்கியமானது. உமிழ்நீர் சரியான அளவில் நம் உணவில் கலக்காமல் இருந்தால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகிறது.
உணவு சாப்பிடுகையில் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமான கோளாறு ஏற்பட்டு அதனால் நெஞ்சு எரிவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
மேலும், உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பு அளவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க நமது உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பின் அளவு அதிகரிக்கும் போது தான் நமக்கு சாப்பிடும் போது தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் இதனால் நமது இரைப்பையின் செரிமான நேரம் குறைக்கப்படும் இது நமது உடலுக்கு மிக நல்லது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…