ஜலம் என்றால் தண்ணீர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அதனால் ஜலதீபம் என்பது தண்ணீரில் ஏற்றி வைக்கப்படும் தீபமே. தண்ணீரில் தீபம் ஏற்றி வைப்பது சுலபமான காரியமல்ல என நமக்கு தெரியும். அதனை சில வழிமுறைகளை கொண்டு நிறைவேற்றலாம். இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்ததாகும். அதனாலே இது குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது.
ஒரு நல்ல தட்டை எடுத்து கொண்டு அதனை மலர்களால் அலங்கரித்து விட்டு, பின்னர், ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது விளக்கு ஏற்றுவதற்கு உகந்த எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். தண்ணீரும் எண்ணெயும் ஒன்று சேராது. அதனால் எண்ணெய் மேலே இருக்கும். பின்னர், எண்ணெயில் ஊற வைத்த விளக்கு திரியை அதன் மேல் வைக்கவேண்டும்.
தண்ணீரில் திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைத்து அதன்மீது திரியை வைக்கலாம். இது திரியை உள்ளே மூழ்கி தீபம் அணைவதை தடுக்கும்.
இந்த குபேர ஜல தீபத்தை வியாழக்கிழமை ஏற்றவேண்டும். வியாழக்கிழமை குபேரனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய நாள் மாலை இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, வெள்ளி, சனி என மூன்று நாட்கள் தொடர்ந்து எரியவிட வேண்டும். அதனை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து பூஜை செய்யும் போது, அந்த ஜலதீபத்தின் ஒளியானது உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். எதிர்மறையான ஆற்றல்களை தகர்த்துவிடும். வீட்டில் அமைதி நிலவும். உங்கள் மன உளைச்சலை கட்டுப்படுத்தி குறைந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள். இந்த பூஜையை முழுமனதுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…