தண்ணீர்தான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில் ஏதுமில்லை. தண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலகில் தற்போது நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர்ப் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும் விழிப்புணர்வுக்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் இந்நாள் குறித்து மக்களிடையே விரிவாகப் பிரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதக்குலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இந்த தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட இதன் விளைவே. இது, ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. எனவே உலகில் இனி யுத்தம் என்று ஒன்று வந்தால் அதற்க்கு காரணம் தண்ணீர் என கூறப்படும் நிலையில் அந்த தண்ணீரை சிக்கணமாக பயன்படுத்த வேண்டும். மழை பொழிய அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…