வாரத்திற்கு 20 மணிநேரம் டிவி பார்த்தால் போதும்.. ரூ.65,600 சம்பளம்! அட.. நிஜமாதான் சொல்றேன்!!
நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புகிறீர்களா? டிவி பார்ப்பதே வேலையாக இருப்பதுபோல ஒரு வேலை வேண்டுமா? ஒரு தொழில்நுட்ப நிறுவனம், டிவியை பார்த்து ரசிக்கும் வேலை ஆட்களை தேடுகிறது. அந்தவேளைக்கு நீங்கள் நல்ல எழுதும் திறன் கொண்ட ஆங்கிலப் பேச்சாளராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த வேலையே, “உலகில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை” என்று தன்னை தானே விவரிக்கும் ஆன்பய் (onbuy) என்ற நிறுவனம் விளங்குகிறது. நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு டிவி பார்த்தல் £ 35 (இந்திய மதிப்பில் ரூ. 3,281), வாரத்திற்கு குறைந்தபட்சம் 20 மணிநேரம் பார்த்தல், அதாவது நீங்கள் ஒவ்வொரு வாரமும் 20 மணிநேரம் பார்த்தல் £ 700 (இந்திய மதிப்பில் ரூ .65,600) சம்பாதிக்கலாம் என தெரிவித்தது.
டி.வி.க்கள், கேமராக்கள், ஸ்மார்ட் சாதனங்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் வீட்டு சினிமா அமைப்புகள் உள்ளிட்ட பல மின்னணு தயாரிப்புகள் குறித்த கருத்துக்களை வழங்கக்கூடிய “தொழில்நுட்ப சோதனையாளரை” இந்த நிறுவனம் அழைக்கிறது.
இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வொரு மாதமும் டிவி உள்ளிட்ட பொருட்கள் வரும். அந்த பொருட்களின் வடிவமைப்பு, செயல்திறன், ஆயுள், ஒலி, காட்சி, செயல்பாடு மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றை நீங்கள் சோதிக்க வேண்டும். அதனை சோதித்த பின்னர், அந்தப்பொருட்களில் உள்ள குறை, நிறைகளை 200 வார்த்தைகள் மதிக்கத்தக்க ஒரு பேப்பரில் எழுத வேண்டும்.
அவ்வாறு நீங்கள் செய்தாலே போதும். ஒரு வாரத்தில் நீங்கள் 65,600 வரை சம்பாதிக்கலாம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் காஸ் பாட்டன் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான தகவல்களையும், தடையற்ற அனுபவத்தையும் வழங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
எனவே தொழில்நுட்ப வல்லுநரிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதன் மூலம், தயாரிப்புகளை அதன் வேகத்தின் மூலம் உண்மையிலேயே வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து ஆழ்ந்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என கூறினார்.