#viral video: பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடி..!கல்லூரி கால்பந்து ரசிகர்கள்..!

Default Image

பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடியை பயன்படுத்திய கல்லூரி கால்பந்து ரசிகர்கள் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சனிக்கிழமை அன்று நடந்த 22 ஆம் எண் மியாமி மற்றும் அப்பலாச்சியன் ஸ்டேட் இடையேயான கால்பந்து ஆட்டத்தின் போது அனைவராலும் கவரப்பட்ட கேட்ச் ஒன்று நடந்தது. அது மைதானத்தில் நிகழவில்லை மாறாக அங்குள்ள ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது.

ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் ஒரு பூனை ஒன்று நுழைந்துள்ளது. பின்னர் மேல் தளத்தின் முகப்பில் இருந்து அது கீழே விழும் நிலைக்கு ஆளானது. அந்த நேரத்தில் அந்த ஸ்டேடியத்தில் உள்ள அனைவரும் அதனை காப்பாற்றுவதற்காக ஒரு அமெரிக்க கொடியை விரித்து இரண்டு முனைகளிலும் பிடித்துள்ளனர். பூனை தடுமாறி கீழே விழும் சமயத்தில் அதனை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், அதற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்