வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு வதந்தி என்று கூறி தயாரிப்பாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த இரு படங்களில் சூர்யா அடுத்ததாக பாண்டியராஜன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் வெற்றிமாறன் சூரியின் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் ,அதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அப்போது வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதனை உண்மையாக்கும் விதமாக வாடிவாசல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கை உருவாக்கி அதில் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தனர் .இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்த வதந்திக்கு தயாரிப்பாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த கலைப்புலி எஸ்.தாணு ,எண்ணியது எண்ணியபடி ,சொல்லியது சொல்லியபடி , வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வலம் வரும் வாகை சூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதிலிருந்து சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…