இணையத்திற்கு பயன்படுத்தப்படும் Google Chrome அல்லது Microsoft Edge ஐப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த இரண்டு ப்ரௌசர்களில் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இணைய பயனர்கள் உங்கள் ப்ரௌசர்களில் தொடர்புடைய Extension-ஐ விரைவில் நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சைபர் நிறுவனமான அவாஸ்ட் கூற்றுப்படி, உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற 28 க்கும் மேற்பட்ட ப்ரௌசர் Extension-ஐ அடையாளம் கண்டுள்ளது. இதுமின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடலாம். இந்த Extension-களால் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
பெரும்பாலான பயனர்கள் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்க இது போன்ற Extension-யை பயன்படுத்துகின்றனர். இதனால், மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவாஸ்ட் கூற்றுப்படி, இந்த Extension பெரும்பாலானவை கூகிள் குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்ஜில் கிடைக்கின்றன. இந்த Extension மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி உங்களை ஏமாற்றலாம். இந்த Extension ஏதேனும் ஒன்றை Google Chrome அல்லது Microsoft Edge இல் பதிவிறக்கம் செய்து இருந்தால், அவற்றை உடனடியாக நீக்கவும், முடிந்தால் Google Chrome அல்லது Microsoft Edge ஐ நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…