Chrome, Microsoft Edge பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. ஹேக்கர்களால் 3 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு..!

Default Image

இணையத்திற்கு பயன்படுத்தப்படும் Google Chrome அல்லது Microsoft Edge ஐப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த இரண்டு ப்ரௌசர்களில் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இணைய பயனர்கள் உங்கள் ப்ரௌசர்களில் தொடர்புடைய Extension-ஐ விரைவில் நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சைபர் நிறுவனமான அவாஸ்ட் கூற்றுப்படி, உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற 28 க்கும் மேற்பட்ட ப்ரௌசர்  Extension-ஐ அடையாளம் கண்டுள்ளது. இதுமின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடலாம். இந்த Extension-களால் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

பெரும்பாலான பயனர்கள் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்க இது போன்ற Extension-யை பயன்படுத்துகின்றனர். இதனால், மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவாஸ்ட் கூற்றுப்படி, இந்த Extension பெரும்பாலானவை கூகிள் குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்ஜில் கிடைக்கின்றன. இந்த Extension மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி உங்களை ஏமாற்றலாம். இந்த Extension ஏதேனும் ஒன்றை Google Chrome அல்லது Microsoft Edge இல் பதிவிறக்கம் செய்து இருந்தால், அவற்றை உடனடியாக  நீக்கவும், முடிந்தால் Google Chrome அல்லது Microsoft Edge ஐ நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்