எச்சரிக்கை! இந்த 9-வகை கை சானிடைசர்களை பயன்படுத்தாதீர்கள்.!

Default Image

மெத்தனால் கலந்த 9 வகையான கைது சானிடைசர்களை பயன்படுத்த கூடாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நீங்கள் பயன்படுத்தும் சானிடைசர்களில் அனைத்தும் நல்லதல்ல. சில சானிடைசர்களை நாம் பயன்படுத்துவன் மூலம் உங்கள் தோல் மற்றும் உடலுக்கு நச்சுத்தன்மை ஆகி விடும்.

அந்த வகையில் மெக்ஸிகோவில் உள்ள எஸ்க்பியோகெம் எஸ். ஏ. டி சிவி என்ற நிறுவனம் தயாரித்த சானிடைசர்கள் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சானிடைசர்களில் அதிக அளவு மெத்தனால் கலந்து இருப்பதால் அது உடலுக்கு நச்சு தன்மை அளிக்கும். அவ்வாறு பயன்படுத்த கூடாத சானிடைசர்கள்,

All-Clean Hand Sanitizer

  • Esk Biochem Hand Sanitizer
  • CleanCare NoGerm Advanced
  • Hand Sanitizer 75% Alcohol
  • Lavar 70 Gel Hand Sanitizer
  • The Good Gel Antibacterial Gel Hand Sanitizer
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 75% Alcohol
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 80% Alcohol (lot number 74589-005-03)
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 80% Alcohol (lot number 74589-003-01)
  • Saniderm Advanced Hand Sanitizer

    மெத்தனால் மிகவும் விஷமானது, அவற்றை பயன்படுத்துவதன் மூலம் குமட்டல், சோர்வு, மங்கலான பார்வை, தோல் அழற்சி மற்றும் மரணம் கூட ஏற்பட வழிவகுக்கும். மேலும் இந்த மெத்தனால் கலந்த கை சானிடைசர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரிதும் தீங்கு விளைவிக்கும். எனவே சானிடைசர்களை வாங்கும் போது லேபல்களை பார்த்து, அதில் எத்தனால்/ எத்தில் ஆல்கஹால் அல்லது ஐசோபிரபைல்/ஐசோபிரபனோல் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும், எத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt