உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் வார்னர்!

Default Image

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் இரு அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னர் முதல் இரண்டு இடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய வார்னர் 166 ரன்னில் வெளி யேறினார்.
அதற்க்கு முன் கடந்த உலகக்கோப்பை போட்டியில் வார்னர் ஆப்கானிஸ்தான்  அணிக்கு எதிராக 178 ரன்கள் குவித்தார். அதுவே உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி  வீரர்களில் அடித்த அதிகபட்ச முதல் ரன்னாக உள்ளது.நேற்று போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.
178 – Warner v AFG, 2015
166 – Warner v BAN, 2019
158 – Hayden v WI, 2007
153 – A Finch v SL, 2019
149 – A Gilchrist v SL, 2007

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்