பாலியல் குற்றச்சாட்டு காரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவன தலைவர் பதவி விலகினார்
- வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் “சூப்பர் மேன்” , “பேட் மேன் ” , “ஹாரிபாட்டர்” ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்து உள்ளது.
- இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘கோல்ட் டிக்கர்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். கடந்த 1923ம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ஹேரி வார்னர், ஆல்பெர்ட் வார்னர்,சாம் வார்னர் மற்றும் ஜேக் வார்னர் ஆகியோர் இணைந்து தொடங்கினர். கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது.
இந்நிலையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கெவின் டுசுஜிஹாரா.இவர் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்படும் திரைப்படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி சார்லோட்டே கிரிக் என்ற நடிகை உடன் உறவு வைத்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தியது.இந்நிலையில் திடீரென கெவின் டுசுஜிஹாரா தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் “சூப்பர் மேன்” , “பேட் மேன் ” , “ஹாரிபாட்டர்” ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘கோல்ட் டிக்கர்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.