வீணானது ரஷ்யாவின் முயற்சி.. அர்மீனியா – அஜர்பைஜான் இடையே மீண்டும் மோதல்!
ரஷ்ய அதிபர் புதின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அர்மீனியா – அஜர்பைஜான் இடையே சண்டை நிறுத்திய நிலையில், 24 மணிநேரதிற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. இந்தநிலையில், நகோர்னோ-கராபத் பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக சிறியளவிலான மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். அந்த மோதல் போராக மாறிய நிலையில், பயங்கர ஆயுதங்களை கொண்டு இருதரப்பும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையே நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை, 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகள் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டனர். இந்தநிலையில், அஜர்பைஜான் நாட்டின் இரண்டாம் இரண்டாவது பெரிய நகரமான கஞ்சா மீது ஆர்மீனியப் படைகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த குண்டுவீச்சு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்து 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் தாக்குதல் நடத்தியதற்கு அஜர்பைஜான் குற்றம் சாட்டியது.