மும்பை செல்ல விரும்புகிறீர்களா….? நிச்சயம் இந்த 5 இடங்களுக்கு மறக்காமல் செல்லுங்கள்…!

Default Image

விடுமுறை நாட்களை கழிப்பதற்காக பலரும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என விரும்புவது வழக்கம் தான். ஆனால் எங்கு செல்வது? நீங்கள் இந்த மாதம் உங்கள் விடுமுறையை கழிக்க வேண்டும் என விரும்பினால், மும்பைக்கு பயணம் செய்யலாம். செப்டம்பர் மாதத்தில் மும்பையை சுற்றிப் பார்ப்பதற்கான பல இடங்கள் உள்ளது. இந்த மழை காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு செல்ல கூடிய புதுமண தம்பதிகள் அல்லது குடும்பத்தினர் யாராக இருந்தாலு,ம் நிச்சயம் மும்பையில் உள்ள இந்த 5 இடங்களுக்கும் சென்று சுற்றிப் பாருங்கள்.

பஞ்சகனி

முதலாவதாக மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள பஞ்சகனி எனும் மலை பகுதி குறித்து அறிந்து கொள்வோம். சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு அருமையான இடம் பஞ்சகனி. இந்த இடத்தை நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும்.

panjakani

ஏனென்றால், இது மிகவும் பசுமை நிறைந்த இடம். 1,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமான மற்றும் இனிமையான மனநிலையை வழங்கக்கூடியது. இதன் சிறப்பம்சங்கள் இதில் அழகிய பள்ளத்தாக்கு மற்றும் அசாதாரணமான வானிலை இருக்கும். மேலும் இப்பகுதியில் ஸ்ட்ராபெர்ரி அதிக அளவில் கிடைக்கும்.

மலேஜ் கேட்ஸ்

இதுவும் ஒரு மலைப்பகுதி தான். இந்த பகுதியில் கண் கவரும் நீர்வீழ்ச்சிகள், அழகிய கோட்டைகள் மற்றும் பசுமையான புற்கள் பல இடங்களில் இருக்கும். இப்பகுதி மும்பைக்கு சென்றால் நீங்கள் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த ஒரு இடமாகும். இந்த பகுதிகளுக்கு மலை ஏற விரும்பக் கூடியவர்கள் நிச்சயம் செல்லலாம். இந்த இடத்தில் தான் மல்ஷேஜ் நீர்வீழ்ச்சி, பிம்பல்கான் ஜோக அணை, ஹரிஷ்சந்திரகாட் மற்றும் அஜோபா மலைக்கோட்டை ஆகியவை உள்ளது.

கொலைத்

கோடை மற்றும் குளிர் காலம் ஆகிய இரண்டு சூழ்நிலைகளில் மிக அழகாக தோற்றமளிக்க கூடிய மிக முக்கியமான பகுதி தான் கொலைத். இந்த பகுதியில் நீர்வீழ்ச்சிகள் அதிகம் காணப்படும். மேலும் பசுமையான சுற்றுச்சூழல் காணப்படுவதுடன், புகைப்பட கலைஞர்களுக்கு இது ஒரு சிறந்த பகுதியாக இருக்கும். இந்த பகுதியில் தாம்ஹினி காட் நீர்வீழ்ச்சி, பீரா அணை, கோசாலா கோட்டை, சுதர்வாடி ஏரி மற்றும் தலா கோட்டை ஆகியவையும் உள்ளது.

ஜவ்ஹர்

jawhar

ஜவ்ஹர் குடும்பமாக உங்கள் விடுமுறையை கழிக்க சென்றவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். நீங்கள் ஒரு வரலாற்று ஆர்வலராக இருந்தால் நிச்சயம் இந்த பகுதிக்கு நீங்கள் செல்லலாம். இங்கு அட்டகாசமான அரண்மனைகள் மற்றும் பிரமாண்டமான கோட்டைகளும் இருக்கும். இது குகனா பழங்குடியினரின் தாயகம். இந்த பகுதியில் டப்தபா நீர்வீழ்ச்சி, ஜெய் விலாஸ் அரண்மனை, சன்செட் பாயிண்ட், ஷிர்பமல் ஆகியவையும் உள்ளது.

நாசிக்

இது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அட்டகாசமான ஒரு சுற்றுலா பகுதி. இங்கு திராட்சை தோட்டங்கள் மிக அதிக அளவில் காணப்படும். மேலும் கண்ணைக்கவரும் நீர்வீழ்ச்சிகளும், அற்புதமான கோவில்களும் இந்த இடத்தில் இருக்கும். இந்த பகுதியில் நீங்கள் செப்டம்பர் மாதத்திற்கு சென்றால் குளிர்ந்த காற்று, அட்டகாசமான இயற்கை காட்சி மற்றும் மூடுபனி கொண்ட வானம் ஆகிவற்றை பார்க்கலாம். மேலும் இந்தப் பகுதிகளில் திராட்சைத் தோட்டம், பஞ்சவடி, சப்தாஷ்ருங்கி மற்றும் நாசிக் குகைகள் ஆகியவற்றையும் காணலாம்.

இன்று நாம் மும்பையில் உள்ள முக்கியமான சில சுற்றுலாப் பகுதிகள் குறித்து அறிந்து கொண்டோம். இந்தப் பகுதிகளுக்கு கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி விருப்பப்பட்டவர்கள் சென்று வரலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்