உதட்டை பெரிதாகக்க வேண்டுமா..? இதை செய்து பாருங்கள் ..!
தற்போதுள்ள பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.அதிலும் அவர்களின் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள வண்ண வண்ண நிறங்களில் உதட்டுச்சாயம் போட்டு கொள்கின்றனர்.
சிலர் உதடு எடுப்பாக இருக்க வேண்டுமென உதட்டிற்கு செயற்கை முறையில் பெரிதாகி கொள்கின்றனர்.மேலும் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெரிய உதடு பெற முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் அது நிரந்தரமானவை இல்லை.
இந்நிலையில் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டு உதட்டை எப்படி பெரிதாக்கலாம் என பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன் உப்பு
லவங்கப்பட்டை
ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு
ஒரு ஸ்பூன் வாசலின்
லிப்ஸ்டிக் பிரஸ்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும், ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டையை அந்தக் கிண்ணத்தின் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் வாசலின் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் விரல்களில் எடுத்து உதட்டில் தடவவும். லிப்ஸ்டிக் போல் உதடு முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து இந்த கலவையை உதட்டிலிருந்து துடைத்து எடுக்கவும்.
உதட்டில் ஏதாவது ஒரு எரிவது போன்று உணர்ந்தால் ஐந்து நிமிடத்தில் அதனை துடைத்து விடவும் பிறகு பீட்ரூட் சாறு லிப்ஸ்டிக் பிரஸ் வைத்து உதட்டின் மேல் சமமாக தடவும். மறுநாள் குளித்து முடித்தவுடன் உதட்டில் வாசலின் தடவி எப்போதும் போல உங்கள் வேலையை நீங்கள் செய்யலாம்.
ஒரு மாதம் வரை இந்த முறையை பின்பற்றி வந்தால் உங்கள் உதடு முன்பை விட சற்று பெரிதாக இருக்கும்.