ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம்.
ஆப்பிள் போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் செயலி, ஆப்பிள் மியூசிக். இந்த செயலின்மூலம் நாம் பாடல்களை கேட்டு மகிழலாம். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கு மாதம் 49 ருபாய் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தாமல் கேட்டால், ஆப்லைனில் பாடல்கள் கேட்பது, குறிப்பிட்ட அளவில் பாடல்களை ஸ்கிப் (skip) செய்தால் விளம்பரம் வருவது, உள்ளிட்ட பல தொல்லைகள் இருக்கும்.
இதனால் பலரும் இலவசமாக ஆப்பிள் மியூசிக் வசதி கிடைக்குமா என ஏங்கி வருகின்றனர். மேலும் ஆப்பிள் இதற்கான இலவச சந்தாக்களை அறிவித்தது. அது, புதிய பயனர்களுக்கு மட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் மியூசிக்-ன் 5 மாதம் இலவச சந்தாவை பெற முதலில் உங்களின் iPhone, iPad or iPod-ல் ஷாசம் (Shazam) செயலியை பதிவிறக்கம் செய்யவும். அந்த செயலின்மூலம் பாடலின் ஒரு வரியை கேட்பதன்மூலம் அந்த பாடலின் பெயரும், அந்த பாடல் குறித்த தகவலும் நமக்கு தெரியும். செயலியை பதிவிறக்கியப் பின், ஏதாவது ஒரு பாடலை கண்டுபிடிக்கவும்.
அந்த பாட்டின் பெயர், அந்த பாட்டை எழுதியவர், உள்ளிட்ட குறிப்புகள் தெரியும். மேலும், அதனை கேட்கவும் வசதி இருக்கும். அப்பொழுது நீங்கள் ஆப்பிள் மியூசிக் வழியாக கேட்பதை கேட்கும் வசதியை தேர்வு செய்யவேண்டும். அதன்பின் அந்த செயலிக்குள் செல்லும். பின்னர், 5 மாத இலவச சந்தா சலுகையைக் காண்பிக்கும். அவ்வாறு உங்களின் 5 மாத இலவச சந்தாவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…