நிம்மதியான தூக்கம் வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கள்..!!

Default Image

இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமான சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது அந்த தூக்கம் சரியா கிடைக்காவிட்டால் அதுவே உடலில் பல நோய்களை உண்டாக்கும். உற்சாகமாக சிந்திக்க நினைவாற்றல் பெற நோயில்லாமல் வாழ மேலும் பல செயல்பாடுகளுக்கு ஆறு முதல் ஏழு நேர தூக்கம் தேவை பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால் கூட மெலடோனின் சுரக்காது. மெலடோனின் சுரக்காவிட்டால் தூக்கம் வராது.
தூக்கம் இருந்தால் தான் உடலுக்கு பல ஓய்வுகள் கிடைக்கிறது. சரியான ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தால் உடல் உறுப்புகள் விரைவில் பாதிக்கப்படும். அதனால் சாப்பிடுவதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தூக்கம் வருவதற்கு என்று தூக்க மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது.

இரவில் உடனே தூங்க வேண்டும் என்றால் சிறிது நேரம் புத்தகம் படிக்க வேண்டும். அதுவும் ஆர்வத்தை தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல் போரடிக்கும் புத்தகத்தை படிக்க வேண்டும். ஏனெனில் போரடிக்கும் புத்தகத்தைப் படித்தால் உங்களுக்கு உடனே தூக்கம் வந்துவிடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல் தினமும் ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். ஒரே நேரத்தில் தூங்கி கொண்டிருந்தால் மூளையில் செரோட்டனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து தானாக தூக்கத்தை உண்டாக்கும்.
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் படுக்கும் பொழுது அறையில் வைத்து இருந்தாள் அது உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும் இதிலிருந்து மீள வேண்டும் என்றால் இந்த பொருட்களை மற்றொரு அறையில் வைக்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள நீல நிற வெளிச்சம் உங்க மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல் தூக்கத்தை இடையூறை ஏற்படுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்