மீண்டும் மிரட்ட காத்திருக்கும் இன்று நேற்று நாளை-2…?
இந்த இரண்டாம் பாகம் வந்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்ணிலா கபடி குழு, ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளனர் விஷ்ணு விஷால்.இவர் தற்போது பட ஷூட்டிங்கின் போது சிறிய விபத்தின் காரணமாக ரெஸ்டில் இருந்தார். அவரின் தந்தை போலீஸில் உயர் பதவியில் உள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த கடான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது,
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை இந்த படத்தை இயக்குனர் ரவி குமார் இயக்கிருந்தார், ஹிப் ஹாப் தமிழன் இசையில் உருவாகிய இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, மேலும் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பக்கம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகம் வந்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.