ஆர்யாவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!-ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்..!
ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அவரது திரைப்படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமையவுள்ளது.
தமிழில் முன்னணி நடிகரான ஆர்யாவின் சார்பட்டா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் ‘எனிமி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நிறைவான நிலையில் இதன் இதரப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதன் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. மேலும், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்பட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் ஆர்யா, ராசிக்கன்னா நடித்துள்ளனர். இந்த படமும் செப்டம்பரில் வெளியாக இருப்பதால் ஆர்யாவின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது.