ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கு படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதனுடன் ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.அதன் பிறகு படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி நேற்று முதல் தொடங்கிய அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் நேற்று முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களைடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…