தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
இந்த நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் அணைத்து மொழிகளிலும் விஜய்க்கு ரசிகர்களுக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் விஜய்யை வைத்து படம் இயக்க அணைத்து மொழி இயக்குனர்களும் தயாராகத்தான் உள்ளனர்.
அந்த வகையில், தமிழில் ‘நேரம்’ படத்தையும், மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தையும் இயக்கி அல்போன்ஸ் புத்திரன் விஜய்யை வைத்து படம் இயக்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அல்போன்ஸ் புத்திரன் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துகொண்டிருந்தார் . அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யின் படத்தை எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் “பிரேமம் படம் வெளியான போது முதல் பாராட்டே விஜய் சாரிடம் இருந்துதான் வந்தது. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் ஒருமுறை விஜய்யை சந்தித்தேன். நிச்சயம் ஒருநாள் என்னை படம் இயக்க அழைப்பார் என்று நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…