கடந்த 8 மாதங்களாக நிலவி வந்த பொது முடக்கத்திற்கு பின் தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திற்க்கப்பட்டது. இதனிடையே புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்றும் , விபிஎப் கட்டணம் ரத்து செய்யாமல் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா கூறியிருந்தார் .
இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது . அதனை தொடர்ந்து பல முறை இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் கியூப் நிறுவனம் நவம்பர் மாதம் முழுவதும் திரையிடப்படும் புது திரைப்படங்களுக்கு விபிஎப் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது .
அதன்படி தீபாவளிக்கு விபிஎப் கட்டணமின்றி புது படங்கள் வெளியாகியது . அதன் பின்னரும் விபிஎப் கட்டணம் ரத்து செய்வது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது அனைவரும் இணைந்து முடிவு எடுத்துள்ளனர்.
அதாவது தமிழ் திரைப்படத்துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீளவும், புதிய படங்கள் வெளியாக எந்த தடையும் இருக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் விபிஎப் கட்டணத்தில் இருந்து அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் 60 சதவீத கட்டணத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் விபிஎப் கட்டணம் தொடர்பான நிரந்தர தீர்வை முன்று சாராரும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மார்ச் மாதம் இறுதி வரை பெரிய பட்ஜெட் உட்பட அனைத்து படங்களும் எந்த தடையுமின்றி வெளியாகும் . இதன் மூலம் தமிழ் சினிமா மொத்தமாக மீண்டு வரும் என்றும் தெரிவித்துள்ளார் .
தமிழ் சினிமா மீண்டு வர உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு அனைவரது சார்பிலும் நன்றியை தெரிவித்துள்ளார்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…