திரையரங்குகளில் புது திரைப்படங்களை திரையிட விபிஎப் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீபாவளிக்கு புது படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது . இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .
இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து பலமுறை இரு தரப்பினருக்கும் இடையே
நடந்து வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்ளவில்லை என்றும் ,எனவே விபிஎப் கட்டணம் குறித்து முடிவு வரும் வரை புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்றும் ,தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்றும் இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா அறிக்கையை வெளியிட்டு தெரிவித்திருந்தார் . அதனையடுத்து திரையரங்குகளில் பழைய மெகா ஹிட் படங்கள் திரையிடப்படும் என்று கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது கியூப் நிறுவனம் விபிஎப் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார் .அதில் டிஜிட்டல் சினிமா உருவாக்கத்திற்காக பல பணிகளை செய்து வரும் முன்னணி நிறுவனமான கியூப் சினிமா கொரோனா நெருக்கடி காரணமாக முடங்கியுள்ள சினிமாத்துறையை மீட்பதற்காக விபிஎப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளதாகவும், எனவே இந்த நவம்பர் மாதம் முழுவதும் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு விபிஎப் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது .
விபிஎப் கட்டணம் ரத்து மூலம் தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் செய்யப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது . மேலும் இறுதி கட்ட பணிகளை செய்ய இயலாமல் முடங்கி கிடக்கும் திரைப்படங்களின் பணிகளை மீண்டும் துவங்க இந்த அறிவிப்பு ஊக்கச்சக்தியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனுடன் தயாரிப்பாளர்கள் விபிஎப் கட்டணம் தவிர தடவாள கட்டணங்கள் ,கண்டெட் டெலிவரி மற்றும் நிர்வாகத்திற்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது .எனவே மக்களின் விருப்பம் போன்று தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…