இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

Default Image

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இலங்கையில் கடும் நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய, கடிதம் அனுப்பி, அதன் பின்னர் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்க பட்டார்.

 20ஆம் தேதி (இன்று) தேர்தல் அங்கு நடைபெறும் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள்  வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் 223 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.  2 பேர் புறக்கணிப்பு. 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 110 வாக்குகள் பெற்றவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

இந்த போட்டியில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கும் அதிபர், 2024 நவம்பர் மாதம் வரையில் பதவியில் இருப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்