மீனவர்கள் கையில் சிக்கிய திமிங்கலத்தின் வாந்தி! அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் திமிங்கலத்தின் வாந்தியை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.25 கோடியாம்.
வாந்தி என்றாலே நாம் அனைவரும் அருவருக்க கூடிய விஷயம். ஆனால், ஒரு மீனவரின் கையில் சிக்கிய வாந்தி அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது. மாதத்திற்கு 500 பவுண்டுகள் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு நபர், தான் கையில் கிடைத்த சாதாரணமான பாறை போன்ற ஒரு பொருளால் கோடீஸ்வரராகுவோம் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
அம்பர்கிரிஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் வாந்தியானது, மிகவும் விலைமதிப்புள்ள ஒரு பொருளாக கருதப்படுகிறது. பாறை போன்ற இந்த பொருளானது, கடலின் புதையலாக கருதப்படுகின்ற நிலையில், தங்கம் மற்றும் வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருளாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் இருந்த பாறை போன்ற ஒரு துண்டை கண்டுபிடித்தார். முதலில் அது என்ன பொருள் என தெரியாத நிலையில், பின்பு அதை ஆராய்ந்த போது,ஏதோ விலைமதிப்புள்ள பொருள் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின், அது திமிங்கலத்தின் வாந்தி என அவர் புரிந்து கொண்டார்.
இதுவரை கிடைத்த அம்பெர்கிரிஸ் 100 கிலோ எடை கொண்டது ஆகும். இதுகுறித்து அவர் கூறுகையில், அம்பர்கிரிஸின் தரத்தை அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இது கிலோவுக்கு 23,740 விலை கிடைக்கு என கூறியுள்ளார். மேலும், இதனை ஆய்வு செய்யும் நிபுணர்களுக்காக காத்திருப்பதாகவும், இது மிகவும் விலைமதிப்பு மிக்க பொருள் என்பதால், திருட்டு அபாயம் அதிகமாக உள்ள காரணத்தால், போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த வாந்தியின் மதிப்பானது ரூ.25 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025