தன்னார்வலருக்கு கடும் உடல்நல குறைவு – ஆராய்ச்சியை பாதியில் நிறுத்திய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்!
இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொரானா பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் மற்றும் அதனை கண்டறியக்கூடிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனாகா நிறுவனமம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இவர்கள் பரிசோதனை செய்து வந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது உலக அளவில் இறுதி கட்டப் பரிசோதனையாக 9 தடுப்பூசிகள் உள்ளது, அதில் ஒன்றாக ஆஸ்ட்ராஜெனாகாவும் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கு தன்னார்வலராக இருந்தவருக்கு தற்போது கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால், தடுப்பூசி பரிசோதனை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் கூறுகையில், தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை தற்போது நிறுத்தபட்டுள்ளது.
பாதுகாப்புகள் குறித்து எங்களின் தணிக்கை குழு ஆய்வு செய்ய உள்ளது. மேலும் மருத்துவ சோதனையின் போது விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு ஏற்படும் போது இத்தகைய நடைமுறை வழக்கமாக கையாளப்படுவது தான் எனவும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 30,000 தன்னார்வலர்களுக்கு ஆஸ்ட்ராஜெனாகா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் மீண்டும் ஆஸ்ட்ராஜெனாகா தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.