விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து 20 நாட்களாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறன்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரராகள் என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான். விவசாயிகளின் போராட்டம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், விவசாயிகளின் உரிமைகளை போராடி நிலை நாட்டுவதற்கு கனடா எப்பொழுதுமே துணை நிற்கும் எனவும் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு மத்திய அரசு சார்பில் வெளியுறவு துறை மூலமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பின்பும் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ, “தான் அமைதியான போராட்டங்களின் உரிமைக்காக எப்பொழுதுமே எழுந்து நிற்பேன்” என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போல ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக்கோரி, லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுமி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் ஆஷ்லீன் கவுர் கில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வீடியோக்களை அனுப்பினேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. எனவே நான் எழுதப்பட்ட கடிதத்தை வழங்கினேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…