அமெரிக்க அதிபர் டிரம்ப்,மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் – ரஷ்ய அதிபர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.எனவே டிரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வேண்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குணமடைய வேண்டி செய்தி அனுப்பியுள்ளார்.இது குறித்து ரஷ்யா அதிபரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும். இந்த கடினமான தருணத்தில் நேர்மையான ஆதரவை வெளிப்படுத்தினர். “உங்களுடைய சக்தி, வீரியம் மற்றும் நம்பிக்கை ஆகியவை ஆபத்தான வைரஸில் இருந்து மீண்டு வர உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vladimir Putin sent a message of encouragement over the COVID-19 diagnosis to President Donald Trump and the First Lady https://t.co/I9KsrMq5HD
— President of Russia (@KremlinRussia_E) October 2, 2020