இந்தியாவில் களமிறங்கும் Vivo Y7X மாடல்.!
இந்தியாவில் Vivo Y7x புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vivo 2022 முதல் இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சில Vivo Y55 5G, Y21A மற்றும் Y75 ஆகியவை அடங்கும். இந்தியாவில் Vivo Y7x என பெயரிடப்பட்ட அனைத்து புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vivo Y7X சிறப்பம்சம்:
Vivo Y7x பிப்ரவரி பிற்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.44-இன்ச் HD+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளதாகவும், இந்த போன் MediaTek Helio G96 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. Y7x ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Funtouch OS ஐ கொண்டு வெளியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த vivo Y7x ஸ்மார்ட்போனில் 8GB ரேம் மற்றும் 256GB மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பவர் பட்டனில் கைரேகை சென்சார் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த போன் Xiaomiயின் Redmi Note 11 4G உடன் போட்டியிடும் என நம்பப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ.18,000க்குள் இருக்கும். ஃபோனில் 50எம்பி ப்ரைமரி சென்சார், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் அடங்கிய டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. Vivo Y75 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.