இன்னும் 3 நாட்களில் Vivo X100, Vivo X100 Pro உலக அளவில் அறிமுகம்..!

Published by
murugan

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த ஆண்டு X90 தொடரில் Vivo X90, X90 Pro மற்றும் X90 Pro+ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், விவோவின் X100 தொடர் அடுத்த வாரம் உலக அளவில் அறிமுகமாக உள்ளது.  நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் இந்த தொடரின் Vivo X100 மற்றும் X100 Pro ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் MediaTek இன் Dimensity 9300 சிப்செட் மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன.

Vivo X100 மற்றும் X100 Pro ஆகியவை டிசம்பர் 14-ம் தேதி உலக அளவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த தகவலை அந்நிறுவனத்தின்  இணையதளத்தில் வெளியிட்டது.  இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் Vivo X100 மற்றும் Vivo X100 Pro வெளியீட்டு தேதியை Vivo இன்னும் வெளியிடவில்லை.இந்தத் தொடரின் அடிப்படை மாடலான X100, சீனாவில் உள்ள மக்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது.

விவோ X100 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே 10 லட்சத்திற்கும் அதிகமான  முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த ஸ்மார்ட்போனில் 6.79 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது உள்ளது. எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு இவ்வளவு பெரிய அளவிலான முன்கூட்டிய ஆர்டர்களைப் பெறுவது விவோ நிறுவனத்திற்கு இதுவே முதல் முறையாகும்.

Vivo X100 மற்றும் X100 Pro ஆகியவை டைமன்சிட்டி 9300 SoC ஐக் கொண்டுள்ளன. இரண்டு போன்களின் கேமராவிற்கும்,  பேட்டரிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. X100 ஆனது 120W வயர்டு சார்ஜிங்குடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. X100 Pro ஆனது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 5,400 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இரண்டு ஃபோன்களும் 1TB வரை உள்ளடங்கிய ஸ்டோரேஜ் கொண்டது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

2 மாடல்களும் உள்ள கேமரா வித்தியாசம்:

விவோ எக்ஸ்100 (Vivo X100) ஆனது 50-மெகாபிக்சல் சோனி ஐ எம் எக்ஸ் 920 (IMX920) கேமரா மற்றும் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) 50-மெகாபிக்சல்  சோனி ஐ எம் எக்ஸ் (IMX989 VCS) பயோனிக் சென்சார் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர  X100 போனில் உள்ள 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ மேக்ரோ லென்ஸுக்கு பதிலாக 50 மெகாபிக்சல் ஜெய்ஸ் ஏபிஓ பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்களும் மூன்றாவது கேமராவாக  50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது.

 

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

28 minutes ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

57 minutes ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

1 hour ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago