நடிகர் திலகம் சிவாஜி பாடலை கிண்டலடித்த விவேக்..!
“பிகில்” திரைப்பட இசைவெளியிட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் என்னும் தனியார் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் அட்லி, காமடி நடிகர் விவேக், ஏ.ஆர் ரகுமான் போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய காமடி நடிகர் விவேக், 1960ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி – வைஜெயந்தி மாலா நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் “நெஞ்சில் குடியிருக்கும்” என்ற அருமையான பாடலை கிண்டலடித்தார். இதனால் நடிகர் விவேக்கிற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்திருக்கிறது.எ
எந்த நடிகை வேண்டுமானாலும் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள், தவறில்லை. ஆனால் ஒரு நடிகரை காக்காய் பிடிப்பதற்காக, ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் சிவாஜியின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்றக் காட்சி வாசனத்தை விவேக் பேசி கிண்டலடித்திருப்பதாகவும், இதுபோல விவேக் செய்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.