தனது “விஸ்வாசம்” இசையை இந்தி படத்தின் டிரெய்லரில் கண்டு அதிர்ந்துபோன டி.இமான் !

பிரபல இந்தி இயக்குனர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ள “மர்ஜவான்” படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரின் இறுதியில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம்” படத்தின் பின்னணி இசையை அப்படியே பயன்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த டிரெய்லரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தனது “விஸ்வாசம்” பின்னணி இசையை பயன்படுத்தியதற்கான எந்தவொரு முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025