விசாயின்றி பிரேசில் போகலாம்.. பிரதமர் அறிவிப்பு..!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ அதிபராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்த தொடக்கம் முதல், விசா தொடர்பாக முக்கிய மாற்றங்களைச் செய்து வந்துள்ளார்.
சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள், பிரேசில் நாட்டுக்கு வர விசா அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். தற்பொழுது சீனா சென்ற போல்சனாரோ, இந்தக் கொள்கையை விரிவு செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளர்ந்த நாடுகளுக்கு விசா ரத்து கொள்கையை விரிவாக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக பிரேசில் வருவதற்கு விசா கட்டாயம் இல்லை எனவும் அறிவித்தார்.