சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக விஷ்ணுவிஷால் அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இவர் வழக்கமாக பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வெடுக்க விரும்புவதாக விஷ்ணு விஷால் தற்போது அறிவித்துள்ள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாழ்க்கைக்கு ஓய்வு அவசியம். எனவே, சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகர் பரோட்டா சூரி விஷ்ணு விஷாலின் தந்தை மீது தொடுத்துள்ள வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஷ்ணு விஷால் எடுத்துள்ள இந்த முடிவு அவரது ரசிகர்களை குழப்பத்திற்குள்ளாகியுள்ளது. இதோ அந்த பதிவு,
Hello guys…
Takin a break is very important for life…Taking a break from social media for sometime..
See u soon 🙂— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) April 21, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025