தல-61 படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறாரா.? உண்மையை கூறிய பிரபல நடிகர்.!

Default Image

தல அஜித்தின் அடுத்த படத்தை பில்லா பட இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்க போவதாக வெளியாகிய தகவல் பொய் என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து, அஜித் அவர்கள் பலரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த விஷயம் அஜித்தின் 61வது படத்தை குறித்த தகவல்கள் தான். சமீபத்தில் கூட தலயின் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும், சுதா கே பிரசாத் இயக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி கார்த்திக் நரேன், வெங்கட் பிரபு, சிவா உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது. அதனையடுத்து தல அஜித் அவர்களின் அடுத்த படத்தை பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க போவதாகவும், விஷ்ணுவர்தன் ஏற்கனவே அஜித் அவர்களிடம் கதை கூறியதாகவும், அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது .ஆனால் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இடையில் நடக்கவில்லை என்ற உண்மையை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் போட்டுடைத்துள்ளார். இதிலிருந்து தல 61 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
INDvAUS - CT 2025 Semi final
Tamilnadu CM MK Stalin
Minister Thangam thennarasu - BJP State President Annamalai
rohit sharma ct 2025
tvk vijay
dragon movie TAMIL