நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவதாக தனது காதலியான ஜுவாலா குட்டாவை மறுமணம் செய்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால், தற்போது பைசல் இப்ராஹிம் ரைஸின் FIR படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகஜலா கில்லாடி படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தெலுங்கு ஹிட் ஜெர்சியின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் திரைப்படம் மோகன்தாஸ்.
இவர் பேட்மின்டன் வீரரான ஜுவாலா குட்டா என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து அதனை ஜுவாலா குட்டா உறுதியும்படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஜுவாலா குட்டாவிற்கு மோதிரம் அணிந்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது, பிறந்தநாள் வாழ்த்துகள் ஜுவாலா, புதிய வாழ்க்கையின் தொடக்கம் என்றும், மகனான ஆரியன், நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் நாங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம் என்றும், உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இருவரும் சிம்பிளாக மோதிரம் மாற்றி மறுமணம் செய்ததை அடுத்து பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…