விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர்! புதிய பட அப்டேட்!
- விஷ்ணு விஷால் அடுத்ததாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- அதில் சிலுக்குவார் பட்டி சிங்கம் பட இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக விஷ்ணு விஷால் உருவாகியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக எப்.ஐ.ஆர் என்ற படம் தயாராகி வருகிறது. அடுத்ததாக தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதுபோக லைகா நிறுவனம் தயாரிக்கும் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
அடுத்து விஜய் சேதுபதி கதை வசனம் எழுதும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குனர் செல்ல அய்யாவும் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளாராம். இப்படமும் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படமாகும். இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவனிசங்கர் நடிக்க உள்ளாராம்.