லாக்டவுனில்  ஹேர் ஸ்டைலிஸ்டராக மாறிய விஷ்ணு விஷால்.!

Default Image

ஊரடங்கு காலத்தில் தந்தைக்கு சிகை அலங்காரம் செய்யும் விஷ்ணு விஷாலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். 2009ல் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் பைசல் இப்ராஹிம் ரைஸின் FIR படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகஜலா கில்லாடி படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தெலுங்கு ஹிட் ஜெர்சியின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் திரைப்படம் மோகன்தாஸ்.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் கடந்த இரண்டு மாதங்களாக முடிகளை வெட்டாமல் இருந்த நிலையில் பலர் வீட்டிலையே ஒருவருக்கொருவர் முடிகளை மாற்றி மாற்றி வெட்டி வருகின்றனர். பல பிரபலங்களும் அவ்வாறு சிகை அலங்காரம் செய்யும் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தைக்கு முடி வெட்டி சிகை அலங்காரம் செய்யும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவநம்பிக்கையான நேரங்கள், அவநம்பிக்கையான நடவடிக்கைகள், அப்பாவின் ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறுதல் என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்