தெலுங்கு மெகா ஹிட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால்! மீண்டும் கிரிக்கெட்?!

Default Image

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  இவர் நடிப்பில் ஜெகஜால கில்லாடி, FIR என பல படங்கள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஜீவா படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெர்ஸி இப்படத்தை தமிழில் நடிகர் ராணா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். ஹீரோயினாக அமலாபால் நடிக்க உள்ளாராம். முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல பாலிவுட்டில் ஜெர்ஸி பட இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே  தெலுங்கு ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்