விஷாலின் சக்ரா படம் : 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு படத்தை வெளியிடலாம்!
விஷாலின் சக்ரா படம் வெளியீடு 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பின் தான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தில் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தால் 8 கோடியே 29 லட்சத்துக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டதால் நடிகர் விஷால் இந்த படத்திற்கான நஷ்ட ஈடை தான் திருப்பி தருவதாக உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அவர் இதற்கான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், ட்ரெண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு கதையை இயக்குனர் ஆனந்த் என்பவர் படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளார். விஷால் விலகி சென்ற பின் வேறு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தனது கதையை விஷாலை வைத்து சக்ரா எனும் தலைப்பில் எடுத்துள்ளதாக ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
தனது நிறுவனத்தின் அதே கதையை இயக்குனர் ஆனந்த் நடிகர் விஷாலை வைத்து படம் எடுத்து உள்ளதால், அந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 கோடிக்கு உத்தரவாதத்தை செலுத்தி முடித்த பின்பே விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.