புதிய படத்தில் நடிக்கும் விஷால் -ஆர்யா..இயக்குனர் யார் தெரியுமா.?
ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிக்க உள்ளனர்.
நடிகர் விஷால், தற்போது சக்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு முன் இதன் பாதி படப்பிடிப்பு முடிந்தது. மீதமுள்ள சில காட்சிகளை தற்போது படமாக்கபட்டது. இதற்கான படப்பிடிப்பில் விஷால் செலவை குறைத்து சிக்கனமாக நடத்தி முடித்துள்ளாராம்.
தற்போது, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியகியுள்ளது. இதில் நடிகையாக மிருணாளினி தேர்வு செய்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ஆர்யாவும் நடிக்கவுள்ளார் விஷாலுக்கு வில்லனாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.