#BREAKING: விஷால் ரூ.21.29 கோடியில், ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில், ரூ,15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்நிலையில், விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னைக்கு நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, லைக்கா நிறுவனம் தரப்பில் தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தற்போது, இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில், ரூ,15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகையை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் பேக்டிரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்